முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 2 Aug 2023 6:45 PM GMT (Updated: 2 Aug 2023 6:46 PM GMT)

சிவகங்கை அருகே முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை அருகே முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே வல்லனி சீமை கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 68-ம் ஆண்டு முளைப்பாரி உற்சவ திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. அதன்படி வல்லனி சீமை முதல் அண்ணாமலை நகர் வழியாக இளையான்குடி சாலையில் இந்த மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் 24 வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என இரு பிரிவாக போட்டி நடைபெற்றது.

அதில் முதலில் நடந்த பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்து கொண்டன. இந்த பந்தயத்தில் மேலூர் அழகன் கவுசிக் வண்டி முதல் பரிசையும், வல்லாளப்பட்டி மகா விஷ்ணு வண்டி 2-வது பரிசையும், வல்லனி சீமை சேனாதிபதி மற்றும் பரவை சோனைமுத்து வண்டி 3-வது பரிசையும் பெற்றது.

ரொக்க பரிசுகள்

இதை தொடர்ந்து சின்ன மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

இதில் 14 வண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் பரவை சோனைமுத்து மற்றும் பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாத்தேவர் வண்டி முதல் பரிசும், நகரம்பட்டி விஷ்வா வண்டி 2-ம் பரிசும், புதுப்பட்டி ஆதிக்ராஜா வண்டி 3-வது பரிசும் பெற்றது.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ெராக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.


Next Story