கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:46 PM GMT)

சிவகங்கை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே பாகனேரியில் உள்ள இத்திலுடைய அய்யனார் கோவில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் பாகனேரி-கண்டுப்பட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 41 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் வண்டியும், 2-வது பரிசை பாகனேரி பிரபா மோட்டார்ஸ் மற்றும் புலிமலைப்பட்டி முனிச்சாமி ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை கோட்டணத்தாம்பட்டி சிவக்குமார் வண்டியும், 4-வது பரிசை பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாத்தேவர் வண்டியும் பெற்றது.

பரிசு

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 31 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை எஸ்.பி.பட்டினம் எஸ்.ஆர்.எம் ரபீக் வண்டியும், 2-வது பரிசை நைனார்பட்டி மூக்கையா வண்டியும், 3-வது பரிசை சுருளிப்பட்டி சோனையா சுவாமி வண்டியும், 4-வது பரிசை பாகனேரி பிரதாப் வெள்ளையப்பன் வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெaற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை சிங்கம்புணரி செந்தில்குமார் வண்டியும், 2வது பரிசை பாகனேரி தியாகராஜன் மற்றும் நெற்புகப்பட்டி மதியாபுலி ஆகாஷ் வண்டியும், 3வது பரிசை கள்ளந்திரி நகுலன் சேதுபதி மற்றும் பரவை முத்துநாயகி ஆகியோர் வண்டியும், 4வது பரிசை மருங்கூர் முகமது வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள், வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.


Next Story