கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:46 PM GMT)

சிவகங்கை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே புதுப்பட்டியில் பிடாரி அம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 64 வண்டிகள் கலந்துகொண்டன. சின்னமாட்டு வண்டி பந்தயம், தேன்சிட்டு பந்தயம் என இருபிரிவாக போட்டி நடைபெற்றது. முதலில் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 49 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை புதுப்பட்டி ஆதிக்ராஜா வண்டியும், 2-வது பரிசை வெள்ளநாயக்கன்பட்டி ராமையாஇளங்கச்சி வண்டியும், 3-வது பரிசை இளங்கிப்பட்டி ஆண்டி அர்ச்சுணன் வண்டியும், 4-வது பரிசை காரைக்குடி கருப்பணன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை நாட்டரசன்கோட்டை பழனி மற்றும் சின்னமாங்குளம் அழகு ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை திருச்சி ஆச்சியப்பன் வண்டியும், 3-வது பரிசை அனுமந்தம்பட்டி பிரவீன்குமார் வண்டியும், 4-வது பரிசை விராமதி தையல்நாயகி கருப்பையா ஆகியோர் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

இறுதியாக நடைபெற்ற தேன்சிட்டு வண்டி பந்தயத்தில் 15 வண்டிகள் கலந்துகொண்டன.

இந்த போட்டியில் முதல் பரிசை அதிகரை வேங்கை வண்டியும், 2-வது பரிசை நெய்வாசல் பெரியசாமி வண்டியும், 3-வது பரிசை அஞ்சவயல் சாமி பிரதர்ஸ் வண்டியும், 4-வது பரிசை அவனியாபுரம் மோகன் மற்றும் திருமலை கண்ணன் ஆகியோர் வண்டியும் பெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.


Next Story