மாட்டு வண்டி பந்தயம்
மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே மறவர் கரிசல்குளம் கிராமத்தில் வில்வநாதர், செல்வ விநாயகர், அரியநாச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மண்டலபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சாயல்குடி-கமுதி சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவாக பந்தயம் நடந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி வண்டி பெற்றது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு ஏனாதி பூங்குளத்தான் வண்டியும், பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசை சாத்தங்குடி வில்வன் பிரதர்ஸ் வண்டியும் பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள், ரொக்கப்பணத்தை ரேக்ளா பந்தய மாநில துணைத்தலைவர் சித்திரங்குடி ராமமூர்த்தி மற்றும் கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் ஆகியோர் வழங்கினர். ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், மறவர் கரிசல்குளம் ஊராட்சி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.