மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x

திருப்பத்தூர் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கல்வெட்டுமேடு பகுதியில் உள்ள முனியய்யா கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் திருப்பத்தூர்-திருக்கோஷ்டியூர் பைபாஸ் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 36 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தேனி மாவட்டம் எர்ணாம்பட்டி பெருமாள் சாமி மற்றும் கூடலூர் காசிசான்டில்யன் ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை ஈளக்குடிப்பட்டி மணி மற்றும் பரமந்தூர் குமார் ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 4-வது பரிசை பேராவூரணி லிங்கேஸ்வரன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 22 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வெள்ளநாயக்கன்பட்டி ராமையாஇளங்கச்சி வண்டியும், 2-வது பரிசை பூக்கொல்லை ரித்தீஸ்வரன் மற்றும் தேவரம்பூர் ராமநாதன் ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை கண்டவராயன்பட்டி சீமான்முரசு மற்றும் நல்லாங்குடி சசிகுமார் ஆகியோர் வண்டியும், 4-வது பரிசை குண்டேந்தல்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் வண்டியும், 5-வது பரிசை திருநெல்வேலி கரு.ராஜ் மற்றும் கம்பம் முத்து ஆகியோர் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்றி வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.


Next Story