கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x

கல்லல், திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

கல்லல்,

கல்லல், திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

கோவில் திருவிழா

கல்லல் அருகே கீழப்பூங்குடி காளைபுரம் கிராமத்தில் உள்ள பசு ஈஸ்வரர், கள்ளீஸ்வரமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கீழப்பூங்குடி-தேவகோட்டை சாலையில் நடைபெற்றது. பெரியமாடு, சின்னமாடு பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது.

பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை நெற்புகப்பட்டி சதீஷ்குமார் வண்டியும், 2-வது பரிசை அவனியாபுரம் பசும்பொன் வண்டியும், 3-வது பரிசை காரைக்குடி ரிதன்யாஸ்ரீ வண்டியும் பெற்றது. சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை குமாரப்பட்டி ஜெயராஜ் மற்றும் கல்லம்பட்டி சின்னதம்பி வண்டியும், 2-வது பரிசை பாகனேரி தியாகராஜன் மற்றும் நெற்புகப்பட்டி பிரபு வண்டியும், 3-வது பரிசை நரசிங்கம்பட்டி கார்முகில்ராஜா வண்டியும் பெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

அதேபோல சிவகங்கை அருகே கீழவாணியங்குடி வீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி கீழவாணியங்குடி-மானாமதுரை சாலையில் பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது. பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை நகரம்பட்டி கண்ணன் வண்டியும், 2-வது பரிசை திருச்சி செந்தில்பிரசாத் வண்டியும், 3-வது பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டியும் பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை மலம்பட்டி காயத்திரி வண்டியும், 2-வது பரிசை கணக்கன்பட்டி சற்குரு வண்டியும், 3-வது பரிசை கம்பம் பால்கண்ணன் வண்டியும் பெற்றது. நடுமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சிவகங்கை ரோகன் வண்டியும், 2-வது பரிசை பொன்குண்டுப்பட்டி முத்துச்சாமி வண்டியும், 3-வது பரிசை கல்லுப்பட்டி குருந்தடியான் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

திருப்பத்தூர் கல்லுவெட்டுமேட்டு பகுதியில் உள்ள முனியய்யா கோவில் திருவிழாவையொட்டி கல்லுவெட்டுமேடு-திருக்கோஷ்டியூர் சாலையில் பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக போட்டி நடைபெற்றது. பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை பரளி கணேசன் மற்றும் ஈனக்குடிப்பட்டி யாழினி வண்டியும், 2-வது பரிசை பாலார்பட்டி ஜெகதீஷ் வண்டியும், 3-வது பரிசை துலையானூர் பாஸ்கரன் வண்டியும் பெற்றது.

சின்னமாடு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சாத்திக்கோட்டை கருப்பையா மற்றும் நெய்வாசல் பெரியசாமி வண்டியும், 2-வது பரிசை விராமதி செல்வமணி வண்டியும், 3-வது பரிசை எஸ்.எஸ்.கோட்டை சுப்பு வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story