கல்லல், காரைக்குடி பகுதியில் கோவில் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கல்லல், காரைக்குடி பகுதியில் கோவில் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்லல், காரைக்குடி பகுதியில் கோவில் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

கல்லல், காரைக்குடி பகுதியில் கோவில் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட அரண்மனைசிறுவயல் அருகே புளியங்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள கருங்கமுடைய அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் புளியங்குடிப்பட்டி-காளையார்கோவில் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 17 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை புளியங்குடிப்பட்டி எம்.எஸ்.கே. சுரேஷ் வண்டியும், 2-வது பரிசை மாங்குடி பிரகாஷ் வண்டியும், 3-வது பரிசை மேட்டுப்பட்டி ராஜமணி வண்டியும் பெற்றது.

அதன் பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வல்லாளப்பட்டி செல்லியம்மன் வண்டியும், 2-வது பரிசை புளியங்குடிப்பட்டி சவுந்தரம் மற்றும் நல்லாங்குடி சசிகுமார் வண்டியும், 3-வது பரிசை மேலூர் லெட்சுமி டெக்ஸ்டைல்ஸ் கரிகாலன் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

இதேபோல் காரைக்குடி அருகே அமராவதிபுதூர் சூலப்பிடாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பெரியார்நகர் அண்ணாநகர்-ஆறாவயல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நல்லாங்குடி முத்தையா வண்டியும், 2-வது பரிசை அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன் வண்டியும், 3-வது பரிசை உஞ்சனை உமாதேவி மற்றும் பெத்தாட்சிகுடியிறுப்பு ராக்கச்சியம்மன் வண்டியும் பெற்றது.

இதை தொடர்ந்து நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தேவகோட்டை லெட்சுமணன் வண்டியும், 2-வது பரிசை மாத்தூர் குப்புச்சாமி மற்றும் பெத்தாட்சிகுடியிறுப்பு ராக்காச்சி வண்டியும், 3-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story