கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டுவண்டி பந்தயம்

காரைக்குடி அருகே தளக்காவூரில் உள்ள உசிலாவாடிக்கருப்பர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் தளக்காவூர்-கல்லல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 14 வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக போட்டி நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் முதல் பரிசை பாதரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மனோஜ் அழகப்பன் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் அக்னிமுருகன் வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் தேசிங்கு ராஜா வண்டியும், 3-வது வரிசை சாத்திக்கோட்டை கருப்பையா வண்டியும், 4-வது பரிசை சொக்கம்பட்டி கரடிச்சாமி மற்றும் சிங்கம்புணரி சிவபுரிபட்டி மூர்த்தி வண்டியும் பெற்றது.

பரிசு

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தளக்காவயல் காளிமுத்து மற்றும் நல்லாங்குடி சசிக்குமார் வண்டியும், 2-வது பரிசை காரைக்குடி கருப்பணன் வண்டியும், 3-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 4-வது பரிசை துலையானூர் பொறியாளர் பாஸ்கரன் வண்டியும் பெற்றது.

பந்தயத்தில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

1 More update

Next Story