மாட்டு வண்டி-குதிரை வண்டி பந்தயம்


மாட்டு வண்டி-குதிரை வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் மற்றும் பாகனேரி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காளையார்கோவில்

காளையார்கோவில் மற்றும் பாகனேரி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

குதிரை வண்டி பந்தயம்

கல்லல் அருகே பாகனேரி அழகாபுரி கிராமத்தில் உள்ள இலங்கை மகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் அழகாபுரி-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 12 வண்டிகள் கலந்துகொண்டு சின்னமாட்டு வண்டி பந்தயமாக நடைபெற்றது. இதில் முதல் பரிசை ஆலத்துப்பட்டி முனீஸ்வரர் மற்றும் சிங்கினிப்பட்டி பெரியசாமி வண்டியும், 2-வது பரிசை பாகனேரி பிரதாப் வெள்ளையன் மற்றும் நகரம்பட்டி கரியாங்குடிகாளி வண்டியும், 3-வது பரிசை மடங்கிப்பட்டி காவியா மற்றும் வீழனேரி செந்தில் வண்டியும் பெற்றது.

இதேபோல் காளையார்கோவில் சோமேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோவில் வைகாசி தெப்பத்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 41 வண்டிகள் கலந்துகொண்டது. முதலில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கண்டனிப்பட்டி ராஜகண்ணப்பன் வண்டியும், 2-வது பரிசை சிலுக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி வண்டியும், 3-வது பரிசை பேராவூரணி ருத்ராஅப்பாஸ் வண்டியும் பெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

பின்னர் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மேலவளவு பன்னீர்செல்வம் மற்றும் நாகப்பன்பட்டி ஹரிகரன் வண்டியும், 2-வது பரிசை சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் வண்டியும், 3-வது பரிசை சிலுக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தேனி என்.டி.பட்டி குருதர்சன் வண்டியும், 2-வது பரிசை நல்லாங்குடி சசிகுமார் வண்டியும், 3-வது பரிசை புதுப்பட்டி இளையராஜா வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story