காரைக்குடி அருகே மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது
காரைக்குடி
காரைக்குடி அருகே ஊரவயல் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஊரவயல்-நெம்மேனி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 5 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நல்லாங்குடி முத்தையா வண்டியும், 2-வது பரிசை சாத்திக்கோட்டை கருப்பையா வண்டியும், 3-வது பரிசை ஊரவயல் ருத்ராஸ்ரீ மற்றும் நெய்வாசல் பெரியசாமி ஆகியோர் வண்டியும், 4-வது பரிசை செங்கரை விஷ்ணு வண்டியும் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ஊரவயல் ருத்ராஸ்ரீ மற்றும் திருவாதவூர் பாண்டித்துரை ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை தேவகோட்டை பிரசாத் மொபைல்ஸ் மற்றும் தானாவயல் வெங்கடாச்சலம் வண்டியும், 3-வது பரிசை தேவகோட்டை லெட்சுமணன் வண்டியும், 4-வது பரிசை ஊரவயல் ருத்ராஸ்ரீ மற்றும் பரவை சீலைக்காரியம்மன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.