மாட்டு வண்டி பந்தயம்
மாட்டு வண்டி பந்தயம் நடந்தது
காளையார்கோவில்
காளையார்கோவில் சோமசுந்தரேசுவரர்-சவுந்திர நாயகி அம்மன் கோவில் வைகாசி தெப்பத்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நாலுகால் மண்டபத்தில் இருந்து தொண்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 22 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 2-வது பரிசை ஆட்டுக்குளம் நகுல்நிலா வண்டியும், 3-வது பரிசை பொன்பேத்தி மருதுபாண்டியவல்லாத்தேவர் மற்றும் புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டியும், 4-வது பரிசை புதுப்பட்டி கோமாலியம்மன் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை மதகுபட்டி வெள்ளைக்கண்ணு மற்றும் பில்லங்கலம் கருப்பு வண்டியும், 2-வது பரிசை தளக்காவூர் காளிமுத்து மற்றும் எரிச்சி கமல் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.