கல்லல் அருகே சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தம்பத்தி கிராமத்தில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் சாத்தம்பத்தி-கல்லுப்பட்டி சாலையில் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தம்பத்தி கிராமத்தில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் சாத்தம்பத்தி-கல்லுப்பட்டி சாலையில் நடைபெற்றது.இதில் மொத்தம் 38 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு, சின்னமாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. சீறி பாய்ந்த மாட்டு வண்டிகளை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை சாத்தம்பத்தி ஸ்ரீநிதி மற்றும் பீர்க்கலைக்காடு எஸ்.பி.ஆர் வண்டியும், 2-வது பரிசை ஆளவிலாம்பட்டி முத்துலெட்சுமி பேவர் பிளாக் வண்டியும், 3-வது பரிசை ஆலம்பட்டி பர்மாகாளி வண்டியும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை தானாவயல் வெங்கடாசலம் வண்டியும், 2-வது பரிசை புதுப்பட்டி ஆதிக்ராஜா வண்டியும், 3-வது பரிசை துரும்புபட்டி மாதவன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை சித்தானூர் வினித்ரா மற்றும் கண்டதேவி ராமசாமி வண்டியும், 2-வது பரிசை பூவாண்டிபட்டி நாச்சியார் வண்டியும், 3-வது பரிசை தளக்காவயல் சசிக்குமார் மற்றும் எரிச்சி கமல் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.