வெள்ளையபுரத்தில், மாட்டுவண்டி பந்தயம்


வெள்ளையபுரத்தில், மாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளையபுரத்தில், மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா வெள்ளையபுரத்தில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள், பந்தய மாட்டு வண்டி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு பாரம்பரிய வீர விளையாட்டு மாட்டு வண்டி காளைகள் ஒருங்கிணைந்த நலச்சங்கம் ஆகியவை சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பதனக்குடி ரவி தலைமை தாங்கினார். மாட்டுவண்டி பந்தயத்தை திருவாடானை துணை சூப்பிரண்டு நிரேஷ் தொடங்கி வைத்தார்.

இதில் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு, என 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகளும், நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 15 வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 24 வண்டிகளும் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டு வண்டிப்பந்தயத்தில் பேயாடிக்கோட்டை பெரியகருப்பர் துணை பதனக்குடி சிவசாமி உடையார் முதல் பரிசும், பொய்யாதநல்லூர் அபிப்முகமது, சாதிக் பாட்ஷா, திருப்புனவாசல் தங்கராசு காவல்துரை ராஜா ஆகியோர் 2-ம் பரிசும், காரைக்குடி கருப்பண்ணன் சேர்வை நினைவாக ரிதன்யாஜி, எஸ்.பி.பட்டினம் உமர் 3-ம் பரிசும், கே.புதுப்பட்டி கவுசல்யா சிவகங்கை மாவட்டம் வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் 4-ம் பரிசும் பெற்றனர்.இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு, வெற்றி கோப்பை மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story