குண்டும் குழியுமான சாலை


குண்டும் குழியுமான சாலை
x

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்-சிலம்பூர் சாலையில் அழகாபுரத்திலிருந்து ஓலையூர் வரை செல்லும் பிரிவுசாலை உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் இந்த குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். அழகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சைக்கிளில் செல்லும்போது விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story