விற்பனைக்கு குவிந்த நெல் மூட்டைகள்
அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் குவிந்தன.
அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 5,500 நெல் மூட்டைகளை நேற்று விற்பனைக்கு கொண்டு வந்தனர். 75 கிலோ எடை கொண்ட ஏ.டி.டி. 37 வகை ரக குண்டு நெல் ரூ.1,309 முதல் ரூ.1,427 வரை விற்பனை செய்யப்பட்டது. கோ.51 வகை நெல் ரூ.1,010 முதல் ரூ.1,555 வரைக்கும், மகேந்திரா 606 வகை நெல் ரூ.1,470 முதல் ரூ.1,791 வரைக்கும், சூப்பர் பொன்னி ரூ.1000 முதல் ரூ.1,546 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
சொர்ணவாரி அறுவடை பருவம் தொடங்கி ஜூலை மாதம் முதல் அதிக அளவு நெல் மூட்டைகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள அனைத்து கிடங்குகளும் நெல் மூட்டைகளால் நிரம்பியுள்ளது.
எனவே வருகிற 28-ந் தேதிக்கு பிறகு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருமாறும் அல்லது காவேரிப்பாக்கம், ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு செல்லுமாறும் அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சே.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.