என்ஜினீயர் வீட்டில் மீண்டும் திருட்டு
திருப்பத்தூர் அருகே என்ஜினீயர் வீட்டில் மர்ம நபர்கள் மீண்டும் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
என்ஜினீயர் புகார்
திருப்பத்தூர் அருகே உள்ள கல்நார்சம்பட்டி விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் என்ஜினீயர் கனகராஜ். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் இன்ஜினீயராக வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, தற்போது திருப்பத்தூர் அருகே பல்வேறு பழங்களில் இருந்து ஜூஸ் வகைகளை தயார் செய்து வருகிறேன்.
ஆகையால் காலையில் வீட்டை பூட்டி விட்டு தொழிற்சாலைக்கு வந்து விடுவேன். கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த பணம், பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
மீண்டும் திருட்டு
இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்திருந்தேன். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி மீண்டும் வீட்டின் மெயின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமரா, பீரோ ஆகியவற்றை உடைத்து பணம், பொருட்களை திருடியதுடன், பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளார்கள். இரண்டு முறை இதுபோன்று நடந்துள்ளதால் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.