சேலத்தில் ஆடிட்டர் வீட்டில் திருட்டு
சேலத்தில் ஆடிட்டர் வீட்டில் திருட்டு போனது.
சேலம்
கன்னங்குறிச்சி:
சேலம் சின்னத்திருப்பதி சந்திரன் கார்டன் அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். ஆடிட்டர். இவர் கடந்த 8-ந் தேதி தனது மனைவி சைதன்யா, மாமனார் ராம்நாத், மாமியார் கலைச்செல்வி ஆகியோருடன் வெளிநாட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் விக்னேஷ் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குடும்பத்தினர் நேரில் வந்து பார்த்தால் மட்டுமே என்னென்ன பொருட்கள் திருட்டு போனது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முகமூடி அணிந்து சென்றது தெரிந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story