பெண்ணாடத்தில் விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு


பெண்ணாடத்தில்  விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
x

பெண்ணாடத்தில் விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது.

கடலூர்


பெண்ணாடம்,

பெண்ணாடம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 65). விவசாயி. இவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் ஸ்ரீமுஷ்ணம் அருகே எழும்பூர் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது, அவரது வீட்டு பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story