விவசாயி வீட்டில் திருட்டு


விவசாயி வீட்டில் திருட்டு
x

மங்கலம் அருகே விவசாயி வீட்டில் 13 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா மங்கலம் அருகே உள்ள வேடந்தவாடி ஆர்ப்பாக்கம் சாலை வி.பி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45), விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் அவரது வீட்டின் பின்புறம் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். நிலத்தில் இருந்து வீட்டிற்கு வந்த போது தாழ்ப்பாள் போட்டு இருந்த வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.

பின்னர் அவர் உள்ளே சென்று அவர் பார்த்த போது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.4½ லட்சம் இருக்கும்.இதுகுறித்த புகாரின் மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story