ஓய்வுபெற்ற ஆசிாியர் வீட்டில் திருட்டு


ஓய்வுபெற்ற ஆசிாியர் வீட்டில் திருட்டு
x

சேத்தியாத்தோப்பு அருகே ஓய்வுபெற்ற ஆசிாியர் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி தங்கபாப்பு(வயது 70). கோவிந்தராசு, இறந்துவிட்டதால் தங்கபாப்பு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகன் ராஜசேகர், தங்கபாப்புவின் வீட்டின் மேல் மாடியில் வசித்து வருகிறார். தங்கபாப்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் தங்கபாப்புவின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராஜசேகர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. உடனே பீரோவை சோதனை செய்து பாாத்தபோது, அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தொியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story