தேனி நகராட்சி ஊழியர் வீட்டில் திருட்டு


தேனி நகராட்சி ஊழியர் வீட்டில் திருட்டு
x

தேனி அல்லிநகரம் நகராட்சி ஊழியர் வீட்டில் பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி சூர்யாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர், தேனி அல்லிநகரம் நகராட்சியில் உதவி திட்ட அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 30-ந்தேதி இவர், தனது வீட்டை பூட்டிவிட்டு அருப்புக்கோட்டையில் நடந்த தனது உறவினர் திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் மாடியில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

பீரோவில் இருந்த ரூ.31 ஆயிரத்து 500 மற்றும் ஒரு மடிக்கணினி திருட்டு போனது. இதனால் வீட்டில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அவர் பார்வையிட்டபோது, மர்ம நபர்கள் 2 பேர் வீட்டுக்குள் நுழைந்து திருடிச் சென்றதாக தெரியவந்தது. இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 2 பேரையும் தேடி வருகிறார்.


Next Story