மூங்கில்துறைப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் திருட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பெரியநாயகி நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மகன் விஜயகுமார் (வயது 41). கூலி தொழிலாளியான இவர் வீட்டை பூட்டி விட்டு கோவா மாநிலத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார். கடந்த சில நாட்களாக வீடு பூட்டிக் கிடந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story