ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு


ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே சரவணம்பட்டியில் ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை அருகே சரவணம்பட்டியில் ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி

கோவை அருகே சரவணம்பட்டி-காளப்ப்பட்டி ரோடு மார்வெல் பாரம்பரியம் பகுதியில் வசிப்பர் சண்முகம். இவருடைய மகன் ரவிசங்கர் (வயது 51). இவர் நெல்லை மாவட்ட கோர்ட்டில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி, விருப்ப ஓய்வுபெற்றவர். இவருடைய ரவிசங்கரின் மனைவி மற்றும் குழந்தைகள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.

இதனால் ரவிசங்கரும், அவருடைய தந்தை சண்முகமும் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு சென்றனர்.

இதற்கிடையில், 6-ந் தேதி ரவிசங்கர் வீட்டில் வேலை செய்யும் தனலட்சுமியும், ரவிசங்கர் சட்ட ஆலோசனை மையத்தில் பணிபுரியும் வக்கீல் துர்காவும் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் 2 பேரும் தங்களது வேலை முடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிகிறது.

வெள்ளி பொருட்கள் திருட்டு

இந்த நிலையில் நேற்று காலை தனலட்சுமியும், துர்காவும் ரவிசங்கர் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்கள் உள்ளே சென்றபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன.

இதுகுறித்து அவர்கள் ரவிசங்கருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர் திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு புறப்பட்டார். மேலும் ரவிசங்கர் செல்போன் மூலமாக சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் ரவிசங்கர் வந்த பின்னர் தான் வீட்டில் இருந்த பொருட்கள், நகை, பணம் திருட்டு போனதா என்பது குறித்த முழுவிரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story