அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு

குடியாத்தம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
குடியாத்தம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெண் வீட்டில் திருட்டு
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 50). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். வீட்டின் பின்பக்கமாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள் உமாமகேஸ்வரி தூங்கி கொண்டிருந்த அறையை பூட்டியுள்ளனர்.
பின்னர் மற்றொரு அறையில் இருந்த பெட்டியை திறந்து அதில் இருந்த 1½ பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை திருடியுள்ளனர். சத்தம் கேட்டு உமாமகேஸ்வரி வந்த போது அறை கதவின் வெளியே பூட்டி இருப்பதை கண்டு சத்தமிட்டுள்ளார். உடனே மர்மநபர்கள் அறையை திறந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மற்றொரு சம்பவம்
இந்த திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு அருகே வசிப்பவர் நக்கீரன் (74). இவர், தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று காலையில் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்தத ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது
இதுகுறித்து உமாமகேஸ்வரி, நக்கீரன் ஆகியோர் தனித்தனியாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.






