பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு


பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு
x

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உருவப்படத்தை எரித்த அ.தி.மு.க.வினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி கடைவீதியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜாரவி தலைமையில் அ.தி.மு.க.வினர், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதாவுடன் தன்னை ஒப்பிட்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாகவும், இது அ.தி.மு.க.வினர் மனதை புண்படுத்தியதாகவும் கூறி, அண்ணாமலையை கண்டித்து அ.தி.மு.க.வினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் 7 பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

1 More update

Next Story