ஆர்ப்பரித்து கொட்டும் சுண்டட்டி நீர்வீழ்ச்சி


ஆர்ப்பரித்து கொட்டும் சுண்டட்டி நீர்வீழ்ச்சி
x

கோத்தகிரி அருகே சுண்டட்டி நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கெரடாமட்டம் அருகே வனப்பகுதியை ஒட்டி சுண்டட்டி கிராமத்தில் நீர்வீழ்ச்சி உள்ளது. கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்ததால், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இது காண்போரின் மனதை கொள்ளை கொள்வதாக உள்ளது. கோடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகள், சுண்டட்டி நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர். சிலர் ஆபத்தை உணராமல் அத்துமீறி நீர்வீழ்ச்சி பகுதிக்குள் இறங்கி, குளிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, கோத்தகிரி பகுதியில் உள்ள கோடநாடு காட்சி முனை, நேரு பூங்கா, லாங்வுட் சோலை, கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மட்டுமே சுற்றுலா தலங்களாக உள்ளன. சுண்டட்டி நீர்வீழ்ச்சி பார்பதற்கு அழகாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம் மேம்படுத்தி சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால், அப்பகுதி மக்களின் பொருளாதாரம் மேம்பட வாய்ப்பு ஏற்படும் என்றனர்.



Next Story