அரசு டவுன் பஸ்சை நிறுத்தி கண்டக்டரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்


அரசு டவுன் பஸ்சை நிறுத்தி கண்டக்டரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
x

புறப்படும் நேரம் மாற்றப்பட்டதால் அரசு டவுன் பஸ்சை நிறுத்தி கண்டக்டரிடம் பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்

புறப்படும் நேரம் மாற்றப்பட்டதால் அரசு டவுன் பஸ்சை நிறுத்தி கண்டக்டரிடம் பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

டவுன் பஸ்

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காளிபாளையம் வழியாக செங்கப்பள்ளிக்கு தடம் எண் 54 டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு புறப்பட்டு ெபருமாநல்லூர், காளிப்பாளையம் வழியாக செங்கப்பள்ளி சென்று பின்னர் அங்கிருந்து காளிபாளையம் வழியாக திருப்பூர் பழைய பஸ் செல்லும். அதன்படி செங்கப்பள்ளியில் இருந்து காளிபாளையத்திற்கு காலை 8.45 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் பழைய பஸ் நிலையத்திற்கு 9.15 மணிக்கு வந்தடையும். இந்த பஸ் மூலம் பனியன் நிறுவனத்திற்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், நோயாளிகள் பயன் அடைந்தனர். அவர்களுக்கு இந்த பஸ்சில் சென்று வர மிகவும் வசதியாக இருந்தது.

ஆனால் தடம்எண் 54 டவுன் பஸ்சின் நேரம் மாற்றியமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் திருப்பூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் பஸ், செங்கப்பள்ளி சென்று மீண்டும் காளிப்பாளையத்திற்கு காலை 9.15 வருவதாகவும், இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தொழிலாளர்கள் சிரமப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

அது போல் இரவு நேரம் ஒரு சில நாட்கள் மட்டும் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து செங்கப்பள்ளி வருவதாகவும், சில நாட்கள் வருவது இல்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

வாக்குவாதம்

இதன் காரணமாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி சரியான நேரத்திற்கு செல்ல முடியாதல் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதையடுத்து நேற்று காளிபாளையம் வந்த டவுன் பஸ்சை பயணிகள் நிறுத்தி டிரைவர் மற்றும் கண்டெக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது பஸ் நேரம் மாற்றப்பட்டதா? என்று கேட்டனர். அதற்கு அவர்கள் இதுகுறித்து மேலதிகாரிகளிடம் கேட்டால்தான் தெரிய வரும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.


Related Tags :
Next Story