தாளவாடி அருகே வனப்பகுதியில் பழுதாகி நின்ற அரசு பஸ்; பயணிகள் கடும் அவதி

தாளவாடி அருகே வனப்பகுதியில் பழுதாகி நின்ற அரசு பஸ்; பயணிகள் கடும் அவதி
x

தாளவாடி அருகே வனப்பகுதியில் பழுதாகி நின்ற அரசு பஸ்; பயணிகள் கடும் அவதி

ஈரோடு

தாளவாடி

தாளவாடியில் இருந்து தலமலை வழியாக சத்தியமங்கலம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மாவநத்தம் என்ற கிராமத்தின் அருகே சென்றபோது திடீரென பஸ் பழுதாகி ரோட்டில் நின்றது. டிரைவர் முயற்சி செய்தும் பஸ்சை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் ஏறி சென்றனர். கடந்த வாரம் இதே போல் வனப்பகுதியில் அரசு பஸ் பழுதாகி நின்றது குறிப்பிடத்தக்கது. மலைப்பகுதியில் நல்ல தரத்துடன் புதிய பஸ்களை இயக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story