பஸ்கள் மோதல்; டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்


பஸ்கள் மோதல்; டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
x

கீழையூர் அருகே பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

கீழையூர் அருகே பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஸ்கள் மோதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வாய்மேடு உடைந்தேவன் காடு பகுதியைச் சேர்ந்தவர் சோமு. இவருடைய மகன் பரமேஸ்வரன் (வயது 32). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற அரசு பஸ்சை பரமேஸ்வரன் ஓட்டி சென்றார்.

மேலப்பிடாகை கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது எதிரே திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

4 பேர் படுகாயம்

இதில் டிரைவர் பரமேஸ்வரன், அரசு பஸ்சில் பயணம் செய்த திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சுப்பையன் (53) அமீர் (48), மாதவன் (26) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story