மங்கலம்பேட்டை அருகே பஸ் மோதி தொழிலாளி பலி


மங்கலம்பேட்டை அருகே  பஸ் மோதி தொழிலாளி பலி
x

மங்கலம்பேட்டை அருகே பஸ் மோதி தொழிலாளி பலியானாா்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுரேஷ் (வயது 35). இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சுரேஷ், நேற்று மங்கலம்பேட்டை அருகே ரூபநாராயணநல்லூர் கிராமத்தில் உள்ள தனது சகோதரி மகேஸ்வரி வீட்டுக்கு சென்றார்.

பின்னர் விருத்தாசலம் செல்வதற்காக இரவு 7 மணியளவில், அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று சுரேஷ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story