மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
செஞ்சி,
செஞ்சி அருகே காரை கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோபால் மகன் ராஜ் (வயது 26). முருகன் மகன் அஜித் (23). நண்பர்களான இவர்கள் சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் நேற்று மாலை செஞ்சி அடுத்த ஒட்டம்பட்டு டாஸ்மாக் கடை தெருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் மெயின் ரோட்டுக்கு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜ், அஜித் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இது குறித்த தகவலின் பேரில் அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜ்,அஜித் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.