பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Sept 2023 1:00 AM IST (Updated: 10 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே தந்தை இறந்த துக்கம் தாளாமல் ‘வாட்ஸ்-அப்’ செயலியில் இரங்கல் ‘ஸ்டேட்டஸ்’ வைத்து விட்டு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

கோட்டூர்

பொள்ளாச்சி அருகே தந்தை இறந்த துக்கம் தாளாமல் 'வாட்ஸ்-அப்' செயலியில் இரங்கல் 'ஸ்டேட்டஸ்' வைத்து விட்டு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பஸ் டிரைவர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாச்சியூரை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் சண்முக சுந்தரம்(வயது 28). திருமணம் ஆகவில்லை. நாச்சிபாளையம்-உக்கடம் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவராஜ் மரணம் அடைந்தார். தனது தந்தை இறந்ததால் சண்முகசுந்தரம் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் தனது நண்பர்களிடம் தற்கொலை செய்து கொள்ள போவதாக அடிக்கடி கூறி வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சண்முகசுந்தரம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தொடர்ந்து தனது நண்பர்களுக்கு 'நான் நிரந்தரமாக தூங்கப்போகிறேன்' என்று 'வாட்ஸ்-அப்' செயலி மூலம் தனது புகைப்படத்துடன் தகவல் அனுப்பினார். பின்னர் ஸ்டேட்டசில் தனது புகைப்படத்துடன் ஆர்.ஐ.பி. என்று குறிப்பிட்டு இரங்கல் பதிவு செய்தார்.

இது மட்டுமின்றி தனது நண்பர் ஒருவரிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கில் தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சக நண்பர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர்கள் சண்முக சுந்தரத்தின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. உடனே மேற்கூரையில் இருந்த ஓடுகளை பிரித்து, வீட்டுக்குள் இறங்கி பார்த்தனர். அப்போது சண்முகசுந்தரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

விசாரணை

இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை இறந்த துக்கம் தாளாமல் பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது, அந்த பகுதியில் பரிதாபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story