அதிவேகமாக வந்த பஸ் டிரைவருக்கு அபராதம்


அதிவேகமாக வந்த பஸ் டிரைவருக்கு அபராதம்
x

அதிவேகமாக வந்த பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி மேலப்புதூர் சிக்னல் அருகே நேற்று இரவு 8 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று அதிக ஒலி எழுப்பிய படி அதிவேகமாக வந்தது. மேலும் அந்த வழியாக வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதுவது போல் பஸ் வந்தது. இதை அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் கவனித்து பஸ்சை மறித்து பஸ் டிரைவருக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர். மேலும் பஸ்சில் இருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரனையும் பறிமுதல் செய்தனர்.


Next Story