பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்


பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்
x
சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே வெள்ளையூர் ஊராட்சி மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மனைவி சந்திரா. இவர்களுக்கு நித்யா என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் இருந்தனர். சக்திவேல், நித்யா, சந்திரா ஆகியோர் ஒரு மொபட்டில் கடந்த 2019-ம் ஆண்டு சென்றபோது தனியார் பஸ் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திேலயே இறந்தனர். இதையடுத்து டிரைவர் தெடாவூரை சேர்ந்த அருணகிரி (வயது 35) என்பவரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஆத்தூர் குற்றவியல் கோர்ட்டு எண் 2-ல் நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு அருண்குமார் தனியார் பஸ் டிரைவர் அருணகிரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story