பஸ் மோதி டி.வி. மெக்கானிக் பலி
பஸ் மோதி டி.வி. மெக்கானிக் பலியானார்.
கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத்தெரு கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது28). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. மனைவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். விக்னேஷ் கும்பகோணத்தில் டி.வி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கும்பகோணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அண்டக்குடி அருகே முன் சென்ற சுற்றுலா பஸ்சை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சுற்றுலா பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விக்னேஷ் தலையில் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.