பஸ் இயக்க கோரிக்கை


பஸ் இயக்க கோரிக்கை
x

கோவிலுக்கு செல்லும் வகையில் பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் சத்திரம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஏழாயிரம் பண்ணையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாடு பிரசித்தி பெற்றது ஆகும். அதிலும் சனிப்பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள ராஜபாளையம், ஆலங்குளம், செவல்பட்டி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, நடுவப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால் கோவிலுக்கு வந்து செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே பிரதோஷ காலங்களில் சாத்தூரிலிருந்து ஏழாயிரம் பண்ணை, துலுக்கன்குறிச்சி, வழியாக வெம்பக்கோட்டை வரை சிறப்பு பஸ்கள் இயக்கினால் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர எளிதாக இருக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story