மூத்த குடிமக்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும்
மூத்த குடிமக்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும்ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளனர்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதன் தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் மாலதி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராஜாராமன் வரவேற்றார்.மத்திய அரசு வழங்கி வருவது போல 4 சதவீத அகவிலைபடியை, தமிழக அரசும் அனைத்து ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்குவது போல் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் செயலாளர் கண்ணன், இணை செயலாளர் ராம்கோபால், செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம், நிர்வாகிகள் மருதநாயகம், பாலசுப்ரமணியன், பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.