சாலையோர பள்ளத்தில் சிக்கிய பஸ்
அம்பை அருகே சாலையோர பள்ளத்தில் சிக்கிய பஸ் மீட்கப்பட்டது.
திருநெல்வேலி
அம்பை:
அம்பை மெயின் ரோட்டில் பாலம் வேலை நடைபெறுவதால் வாகனங்கள் வாகைக்குளம், பிரம்மதேசம், மன்னார்கோவில் வழியாக மாற்றுப்பாதையில் சுற்றி செல்கின்றன. நேற்று மாலையில் அம்பை பகுதியில் மழை பெய்தது. அப்போது நெல்லையில் இருந்து பாபநாசம் நோக்கி சென்ற அரசு பஸ் வாகைக்குளம் அருகில் சென்றபோது எதிரில் வந்த வாகனத்துக்கு வழி கொடுப்பதற்காக சாலையோரம் ஒதுங்கியது. அப்போது சாலையோர பள்ளத்தில் பஸ் சிக்கி சாய்ந்தபடி நின்றது. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறங்கினர். தொடர்ந்து பஸ்சை கிரேன் மூலம் மீட்டனர். இதனால் அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story