பஸ் போக்குவரத்தை முறைபடுத்த வேண்டும்


பஸ் போக்குவரத்தை முறைபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 5 Oct 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டியில் பஸ் போக்குவரத்தை முறைபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

விருதுநகர்

காரியாபட்டி

காரியாபட்டி பேரூராட்சி வளர்ந்துவரும் நகரமாகும். காரியாபட்டியை சுற்றி சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லவேண்டுமென்றால் காரியாபட்டி வந்து தான் மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருமங்கலம் போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆனால் தற்போது காரியாபட்டி பஸ் நிலையம் விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் பஸ் நிலையம் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்து. எந்த பஸ்கள் எந்த இடத்தில் நிற்கிறது என்று தெரியாமல் பயணிகள் அலைந்து வருகின்றனர். எந்த ஊருக்கு செல்லும் பஸ் எந்த இடத்திலிருந்து நின்று செல்லும் என்று முக்கிய இடங்களில் விளம்பர அறிவிப்பு பலகை அமைத்தால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு ஏதுவாக இருக்கும். பொது மக்களின் நலன் கருதி காரியாபட்டியில் பஸ் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி நெறிமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story