மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பயண அட்டை


மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பயண அட்டை
x

பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பயண அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, பார்வை திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பயண அட்டை புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் நகர் மற்றும் புறநகர் பஸ்களில் பயணம் செய்யும் பார்வை திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக பஸ் பயண அட்டையும் வழங்கப்பட உள்ளது. எனவே பார்வை திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன்கார்டு ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் அளவில் 4 புகைப்படங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.


Next Story