பஸ்களை உரிய நிறுத்தங்களில் நிறுத்த வேண்டும் - போக்குவரத்துத்துறை உத்தரவு
பஸ்களை உரிய நிறுத்தங்களில் நிறுத்த வேண்டும் என டிரைவர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தவிட்டுள்ளது.
சென்னை,
பேருந்து நிறுத்தத்தை விட்டு பஸ்சை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால் பஸ்களை உரிய நிறுத்தங்களில் நிறுத்த வேண்டும் எனவும், அனைத்து டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளை உரிய நிறுத்தங்களில் ஏற்றி, இறக்கி விட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
உரிய நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் ஓடி வந்து ஏற முயற்சி செய்யும் போது தவறி கீழே விழுந்து காயம் ஏற்படவும், சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகின்றன.
மேலும், பஸ்சை சாலையின் நடுவில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நிறுத்த கூடாது எனவும் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story