திருமலைசமுத்திரத்தில் நிற்காத பஸ்கள்
தஞ்சை அருகே திருமலைசமுத்திரத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் அங்கு பஸ்கள் நின்று செல்வதில்லை.
பஸ்கள் நிற்காது...
இந்த 5 கிராமங்களிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பஸ் நிறுத்தத்தில் தஞ்சை-திருச்சி வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் அனைத்தும் நின்று செல்ல போக்குவரத்துக்கழகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை பஸ் டிரைவர்கள், கண்டக்டர் கடைபிடிப்பதே இல்லை. எந்த பஸ்களும் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை. அரசு பஸ்கள் மட்டுமல்ாது தனியார் பஸ்களும் நின்று செல்வதில்லை. ஒருசில டவுன் பஸ்கள் மட்டுமே நின்று சென்று வருகின்றன. இதனால் திருமலைசமுத்திரம் மட்டும் அல்லாது 5 கிராமங்களை சேர்ந்த மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் அவலம்
திருமலைசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி, தஞ்சை, வல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று படித்து வருகிறார்கள். இதே போல் கட்டிட தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் என நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் பஸ் நிறுத்தத்தில் வந்து பஸ்சுக்காக மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு காத்துக்கிடந்தாலும் பஸ்கள் நிற்குமா? என்ற சந்தேகத்துடனேயே தினமும் பயணித்து வருகிறார்கள்.
அடிக்கடி தகராறு
தஞ்சை புதிய பஸ் நிலையத்திலோ அல்லது திருச்சியிலோ பஸ் ஏறும் போது திருமலைசமுத்திரத்தில் பஸ்கள் நிற்காது. செங்கிப்பட்டி அல்லது சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தான் நிற்கும். அதில் இறங்குவதாக இருந்தால் மட்டும் ஏறுங்கள் என்று கண்டக்டர்கள் கறாராக கூறுகிறார்கள். இதனால் பயணிகளுக்கும், கண்டக்ர்களுக்கும் இடையே அடிக்கடி வாய்த்ததகராறும் ஏற்படுகிறது.
இதனால் பஸ்சுக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் செல்பவர்கள் 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் பஸ்சுக்காக காத்துக்கிடக்கும் மாணவ, மாணவிகள், கூலி தொழிலாளர்கள் பஸ் நின்று செல்லாததால் வெகுநேரம் காத்துக்கிடந்து பின்னர், நேரம் ஆகி விடுவதால் மீண்டும் வீட்டுக்கே திரும்பும் நிலையும் உள்ளது.
20 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு எப்போது?
இந்த பிரச்சினை இன்றோ, நேற்றோ ஏற்படவில்லை. கடந்த 20 ஆண்டுகாலமாக இதே நிலையே இருந்து வருகிறது. 20 ஆண்டுகால பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் ஏக்கத்தை தீர்க்க வேண்டும் என்பதே இந்த 5 கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.