தமிழகத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி


தமிழகத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள் 24 மணி நேரமும்  செயல்பட அனுமதி
x
தினத்தந்தி 8 Jun 2022 11:27 AM GMT (Updated: 2022-06-08T17:14:08+05:30)

தமிழகத்தில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக்கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் எனவும் உத்தரவு அமலுக்கு வந்ததில் இருந்து 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நேரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் கொண்டு வரப்பட்ட நடைமுறை, ஜூன் 5 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story