தொழில் அதிபர் தற்கொலை


தொழில் அதிபர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை கணபதியில் தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

கணபதி

கணபதி நேதாஜி நகரை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 39). இவர் சொந்தமாக கிரைண்டர் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், செல்லதுரை மனமுடைந்து காணப்பட்டார். மேலும் மதுபோதைக்கு அடிமையானதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற செல்லதுறை மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் அவர் சின்னவேடம்பட்டி குளம் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அறிந்த சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story