பவானி அருகே பரபரப்புடீக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு


பவானி அருகே பரபரப்புடீக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு
x

பவானி அருகே டீக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

பவானி

பவானி அருகே டீக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

முன்விரோதம்

பவானி அருகே உள்ள நசியனூர் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் அர்ச்சுனன் (வயது 41). இவர் அந்த பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் கோவேந்திரன் (41). இவரும் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அர்ச்சுனனுக்கும், கோவேந்திரனுக்கும் வியாபாரம் செய்வதில் போட்டி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

தகராறு

அர்ச்சுனன் நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய் குட்டி நேற்று முன்தினம் இரவு கோவேந்திரன் கடைக்கு சென்று சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. இதனால் கோவேந்திரன் நாய் குட்டியை தாக்கினார். இதனை அர்ச்சுனன் தட்டி கேட்டு உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் சமாதானப்படுத்தினர். அதன் பிறகு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் டீக்கடையை அர்ச்சுனன் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

பெட்ரோல் குண்டுவீச்சு

இ்ந்தநிலையில் நேற்று அதிகாலை அர்ச்சுனனின் டீக்கடை கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கும், அர்ச்சுனனுக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் 2 குளிர்சாதன பெட்டிகள், பொருட்கள் உள்பட டீக்கடை முழுவதும் எரிந்து நாசம் ஆனது. இதுபற்றி சித்ேதாடு போலீசில் அர்ச்சுனன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அர்ச்சுனனின் டீக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகி ராமன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story