காட்டெருமை சுற்றி திரிவதால் பரபரப்பு


காட்டெருமை சுற்றி திரிவதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Sept 2022 1:00 AM IST (Updated: 22 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் பகுதியில் காட்டெருமை சுற்றி திரிவதால் பரபரப்பு ஏற்பட்டது. மயக்க ஊசி செலுத்தி காட்டெருமையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாமக்கல்

குமாரபாளையம்:-

குமாரபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஓலப்பாளையம், கிழக்குக்காடு பகுதிகளில் காட்டெருமை உலாவுவதாக தகவல் பரவியது. தகவல் அறிந்த வனத்துறை அலுவலர்கள், குமாரபாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து காட்டெருமையை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story