கார் மோதி இறைச்சி கடை தொழிலாளி பலி


கார் மோதி இறைச்சி கடை தொழிலாளி பலி
x

பேரணாம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி இறைச்சி கடை தொழிலாளி பலி

வேலூர்

பேரணாம்பட்டு

குடியாத்தம் அருகே உள்ள காத்தாடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் பாஷா. இவரது மகன் தஸ்தகீர் (வயது 20) இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பேரணாம்பட்டிற்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

செர்லப்பல்லி கிராமம் அருகே குடியாத்தம் சாலையில். சென்று கொண்டிருந்த போது பேரணாம்பட்டு நோக்கிஅதி வேகமாக வந்த கார் ஒன்று தஸ்தகீர் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் தஸ்தகீர் தூக்கி எறியப்பட்டு பலத்த காயமடைந்தார். உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்னர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இதனிடையே காரை ஓட்டி வந்த டிரைவரான கவுராப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் தப்பியோடி விட்டார்.

இது தொடர்பாக பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் தஸ்தகீரின் மாமா நாசீர்கான் புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் வழக்குப்பதிவு செய்து தஸ்தகீர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கார் டிரைவர் கார்த்தியை தேடி வருகிறார்.


Related Tags :
Next Story