யூரியாவுடன் இணை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்


யூரியாவுடன் இணை பொருட்கள் வாங்க   கட்டாயப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்
x

யூரியா உரம் வாங்கும்போது இணை ொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தப்படுவதை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

யூரியா உரம் வாங்கும்போது இணை ொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தப்படுவதை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக உள்ளது. கடந்த சில மாதங்களாகவே கடைகளில் யூரியா உரத்துடன் இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து பல்வேறு தரப்பு விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு யூரியாவுடன் இணை பொருட்கள் வாங்க நிர்பந்தப்படுத்தப்படுவதை கண்டித்து வாக்கடை புருசோத்தமன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் வந்தனர். அவர்கள் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் எதிரில் யூரியா மற்றும் அவற்றுடன் விற்பனை செய்யப்படும் இணை பொருட்களை வைத்து பொங்கல் வைப்பது போன்று செய்து அலுமினிய பானையில் ஒன்றாக கலந்து படையலிட்டு வழிபடுவதுபோல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து வாக்கடை புருசோத்தமன் கூறுகையில், ''கடைகளில் யூரியாவுடன் இணை பொருட்கள் வழங்கப்படுகிறது. இவற்றின் பயன்பாடு அறியாமல் விவசாயிகள் யூரியா ரசாயன உரத்துடன் பயோ உரங்கள், உயிர் உரங்கள் கலந்து மண்ணில் இடுகின்றனர். இந்த உரங்களின் தொழில் நுட்ப விபரம் கடைகாரர்களோ, வேளாண் அதிகாரிகளோ விளக்கி கூறுவதில்லை. உழவர் பயிற்சி நிலையம் மூலம் உழவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி மற்றும் செயல் விளக்கம் போதுமான அளவில் தரப்படவில்லை. எனவே இந்த பிரச்சினையில் வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


Next Story