புளியம்பட்டியில் பொக்லைன் எந்திரம் மூலம் பழுதான அரசு பள்ளிக்கூட கட்டிடம் இடித்து அகற்றம்


புளியம்பட்டியில் பொக்லைன் எந்திரம் மூலம்  பழுதான அரசு பள்ளிக்கூட கட்டிடம் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:30 AM IST (Updated: 19 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

புளியம்பட்டியில் பொக்லைன் எந்திரம் மூலம் பழுதான அரசு பள்ளிக்கூட கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

கோயம்புத்தூர்

நெகமம்

புளியம்பட்டியில் பொக்லைன் எந்திரம் மூலம் பழுதான அரசு பள்ளிக்கூட கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

மாணவர்கள் அச்சம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் 4 வகுப்பறைகள் உள்ளன. இங்கு 42 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என 2 பேர் பணியாற்றி வருகின்றனர். கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆன நிலையில் கட்டிடத்தின் மேற்பகுதியில் மழைநீர் தேங்கி, பக்கவாட்டில் சுவர்கள் வழியாக அனைத்து இடங்களிலும் நீர் கசிவு ஏற்படுகிறது. இதனால் ஜன்னல் கம்பிகள், கதவுகள், கரும்பலகை, மாணவர்கள், ஆசிரியர்கள் அமரும் இருக்கைகள், மேசைகள் மற்றும் தளவாட பொருட்கள், தரைப்பகுதி ஆகியவை சேதமடைந்து, எப்போ இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மாணவர்கள் இருந்தனர்.

இடித்து அகற்றம்

இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அந்த கட்டிடத்தில் மாணவ, மாணவிகளை அமரவைப்பதில்லை. அதற்கு பதிலாக அருகில் இருந்த மாற்று கட்டிடத்தில் அமரவைத்து பாடம் நடத்தி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகம், பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் நலன் கருதி பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஒன்றிய கல்வி அதிகாரி ஆகியோருக்கு பழுதான பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என மனு அளித்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி நேற்று அந்த கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றறும் பணி நடந்தது. இந்த பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.


Next Story