அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x

வாணாபுரத்தில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருவண்ணாமலை

வாணாபுரத்தில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

வீடுகளில் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் குமரவேல் (வயது 55). இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதேபோல் கோட்ரஸ் தெருவை சேர்ந்த கோகுல் (35) வீட்டில் 2 பவுன் நகை, வெள்ளி குத்துவிளக்கு, ரூ.10 ஆயிரம் மற்றும் அர்ஜுனன் (69) வீட்டில் 3 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் டேங்க் தெருவை சேர்ந்த ஏழுமலை (48) வீட்டில் ஒரு பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் ½ கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

ஐயர் தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி (43) வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவங்கள் குறித்து வாணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story